பயிர் பாதுகாப்பு :: டர்னிப் பயிரைத் தாக்கும் நோய்கள்

ஆல்டர்னேரியா இலைப்புள்ளி: ஆல்டர்னேரியா வகை

அறிகுறிகள்:

  • இலைகள், தண்டுகள், காய்கள் மற்றும் விதைகளை தாக்குகின்றன
  • இலைகளில் முதலில் அறிகுறிகள் தோன்றும். விதை தண்டுகளில், சிறிய, மஞ்சள்நிற, சற்றே உயர்ந்த புள்ளிகள் காணப்படும்
  • பின் இந்த புள்ளிகள் தண்டுகள் மற்றும் விதைக் காய்களுக்குப் பரவும். மழைக் காலங்களில் நோய் பரவும். முழுக் காயும் தாக்கக்கூடும், நுனிப் பகுதி கருப்பாகவும், சுருங்கியும் காணப்படும்
  • காய்த் திசுக்களை பூஞ்சான் துளைக்கும். முடிவில் விதைகளைத் தாக்கும். விதைகள் முளைக்காமல் நின்று விடும்

கட்டுப்பாடு:

  • மான்கோசெப் 0.25% தெளிக்க வேண்டும்.




முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015